தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை அண்ணா குடியிருப்பை சேர்ந்தவர் லாம்பர்ட் (52) தொழிலாளி. இவர் நேற்று காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிகொண்டிருந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மதன் (21) என்பவர் லாம்பர்ட் வீட்டில் புகுந்து அவரது கைபேசியை திருடிச்சென்றார். இதன்மதிப்பு ரூ.15 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் வடபாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர்.