தீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை

0
1667

தீபாவளியை முன்னிட்டு பிகில், கைதி போன்ற முன்னணி நடிகர்களின்  படத்தை தினம் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி கிடைக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவ்வாறு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் உறுதிபடுத்தினார்

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபாவளிக்கு தமிழகத்தில் இதுவரை எந்த படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதை மீறி யாரும் சிறப்பு காட்சிகள் திரையிடுவோம் என்று சொன்னாலோ அல்லது கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ அதற்கு அரசு பொறுப்பேற்காது. அதையும் மீறி பிகில் படத்தை திரையரங்குகளில் அரசு அனுமதிக்காத நேரத்தில் ஒளிபரப்பினால் அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகள் எங்களுடையது அல்ல. ஆனாலும், நிச்சயமாக விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளை அவர்களிடம் நாங்கள் கைப்பற்ற போவது உறுதி.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here