சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளைத் தவிர நூற்றுக்கணக்கான சாலையோர மக்கள், சிறு சிறு கூலி வேலைகளில் ஈடுபட்டு, இடமின்றி வாடுபவர்கள் பிளாட்பாரங்களில் தங்கி இருப்பது வழக்கம். இரவு அங்கே தங்கி விட்டு காலையில் தங்களது கூலி வேலைகளுக்கு செல்வார்கள்.
சிறிது நேரத்திற்கு முன்பு போலீசார் அந்த மக்களை அங்கிருந்து அடித்து துரத்தினர். திடீரென்று நடத்தப்பட்ட லத்தி சார்ஜ் காரணமாக அதிர்ச்சி அடைந்த 50 பேர் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.














