கிளம்பிட்டாங்கய்யா…கிளம்பிட்டாங்க…

0
693

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பூட்டான் செல்கிறார். இதுகுறித்து தமது பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் இந்தியா-பூட்டான் இடையிலான நட்பு ஆழமானது பழமையானது

நம்பகமான நட்பு நாடாகவும் அண்டை நாடாகவும் பூட்டான் விளங்குகிறது எமது பயணம் மூலம் இந்த நட்பும் இரு நாடுகளின் எதிர்காலமும் மேலும் வளம் பெறும் பூட்டான் மன்னர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நடத்தும் இந்தப் பேச்சுவார்த்தை பலனுள்ளதாக இருக்கும் என்றும் மோடி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா பூடான் இடையே ராணுவ , பாதுகாப்புத்துறை, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறை ஒப்பந்தங்களும், பூடான் கல்வித்துறை சார்பில், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும்,

சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் நான்கு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. பயணத்தின் இரண்டாம் நாளில் பூட்டானில் ராயல் பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்களுடன் கலந்துரையாட இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here