மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ். எஸ் காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களது தங்க நகைகளைப் பறித்துச்செல்லும் வழிப்பறிச் சம்பவங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்டறிவ
தற்காகவும் ,மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (குற்றம்) இராஜசேகர் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்த போது, குற்றவாளிகள் மணி (எ) வைரமணி, மதன்குமார், சிவா மற்றும் விஜய் ஆகியோர்கள் என தெரியவந்ததது. இவர்கள், மதுரை மாநகரில் 13 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களிலும், சமயநல்லூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு செயின் பறிப்பு சம்பவங்களிலும், இரண்டு வாகன திருட்டிலும் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேற்படி, நபர்களிடமிருந்து 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 90 சவரன் தங்க நகைகள் மற்றும் வழிப்பறி பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.















