நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு தேசிய விருது

0
832

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறப்பாக பணியாற்றும் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கு 2019ஆம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய அளவில் “உட்கிரிஸ்டா சேவை விருது” மற்றும் “அதி உட்கிரிஸ்டா சேவை விருது” களை வழங்கி வருகிறது. இந்த தேசிய விருதுகளுக்கு மதுரை கோட்டத்தில் பணியாற்றும் மூன்று ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரியும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் என். விசாகரன், செங்கோட்டை தலைமை காவலராக பணியாற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் டி.ஆறுமுக பாண்டியன், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் வி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேசிய அளவிலான உட்கிரிஷ்டா விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆறுமுக பாண்டியன் ஒரு விளையாட்டு வீரர். இவர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் ரயில்வே துறை குற்ற வழக்குகளை விரைவாக கையாண்டு சாதனை புரிந்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் விசாகரன் ஆகியோர் ரயில் பயணிகளுக்கு உதவுவது, ரயில்வே துறை சொத்துக்களை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது போன்ற பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here