கீழடி, கொந்தகையில அகழாய்வு நிறைவு

0
1898

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தொடக்கி வைத்தார். இந்த அகழாய்வுப் பணி கீழடி அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கீழடியில் நடந்து வந்த அகழாய்வுப் பணிகளும் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 55 நாள்கள் கழித்து மீண்டும் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்றது. ஆனால் அவ்வப்போது பெய்த மழையினால் அகழாய்வுக் குழிகளில் தண்ணீர் தேங்கி அகழாய்வுப் பணி அடிக்கடி பாதிக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=UsfV81N-Py8&t=489s

6 ஆம் கட்ட அகழாய்வில் பானைகள், ஓடுகள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள், கட்டடச் சுவாமிகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், விலங்கினம் மற்றும் மனித எலும்புக்கூடுகள், தங்கக்காசுகள், உறைகிணறுகள், வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதற்கிடையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு செப். 30ந்தேதியுடன் நிறைவு பெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனால் பல மாதங்களாக நடைபெற்று வந்த கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு தற்போது நிறைவடைந்துள்ளது.

பொதுமுடக்கத்தால் பல நாள்கள் அகழாய்வு நடைபெறாத நிலையில் அகழாய்வுக்கான காலம் மேலும் நீட்டிக்கப்படும் என தமிழார்வலார்களும், தொல்லியல் துறையினரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டவில்லை.

தற்போது ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும், அகழாய்வுக்காக மேற்கண்ட இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here