தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு ஆண்டு தவறினால் மீண்டும் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே டிரைவிங் லைசென்ஸ் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்.















