தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே அழகிரி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
இந்திய நாடாளுமன்றத்திலேயே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால்,தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறமுடியாமல் தமிழக அரசு உள்ளது . அது செயல்பாடு இழந்துவிட்டது.
இந்தியா பொருளாதார சரிவை சந்தித்துள்ளது, பல லட்சம் தொழிலாளர்கள் மோட்டார் வாகன துறையில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஒரு தனியார் பிஸ்கட் தொழிற்சாலை மூடப்பட்டதால் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். கோவையில் முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் விவசாய உற்பத்தி இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு மாறாக கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் வரியை குறைத்துள்ளது
நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக அமையும். தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அழைப்போம் என்று அவர் கூறினார்.














