திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் பட்டினி போராட்டம்

0
1125

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் 42 ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆறு நாட்களாக பட்டினி கிடந்து போராடி வருகின்றனர்.

ஈழத்தமிழ் ஏதிலியர் ஒருவர் குற்றம் ஏதும் செய்யாமலே இந்திய அரசின் வெளிநாட்டினர் சட்டப்பிரிவு 3(2)e ன் படி மத்திய, மாநில அரசுகள் குறிப்பிட்ட இடத்தில் தடுத்து வைக்க முடியும்.

இந்தச் சட்டப் பிரிவின் படியே பல ஆண்டு காலம் ஈழ ஏதிலியர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு துன்பறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

கடுங் குற்றவாளிகளுக்கு இருக்கும் சட்டப்படியான உரிமைகள் எதுவும் இவர்களுக்குப் பொருந்தாது.

எனவே எவ்வித குற்றமும் செய்யாத அவர்களை சாதாரண முகாம்களுக்கு மாற்ற தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here