கோவையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பால் விற்பனையகம், மருந்தகம், பலசரக்கு கடைகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை இயங்கவேண்டும். வணிக வளாகம், சுற்றுலா மையங்கள், திரையரங்குகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், பேக்கரிகளில் ஞாயிற்றுக்கிழமை பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். பொள்ளாச்சி மாட்டு சந்தையில் உள்ளூர்க்காரர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். செப்டம்பர் 20க்குள் அனைத்து நிறுவன பணியாளர்களும் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்.