திருச்சி மணப்பாறை அருகே தவளவீரன்பட்டியைச் சேர்ந்த சிவாஜிகணேசன் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பதற்கு தனக்கு 15000 ஆயிரம் லஞ்சம் வேண்டுமென வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சிவாஜிகணேசன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இன்று காலை 11 மணியளவில் சிவாஜிகணேசன் மணப்பாறை தாசில்தார் அலுவலகம் வந்து பணம் கொடுத்த நிலையில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலும் போலீசார் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
வருவாய் ஆய்வாளர் ஜோதிமணி, உதவியாளர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் நடத்திய விசாரணைக்கு பின்பு இருவரையும் கைது செய்ததாகவும், தொடர்புடைய ஆவணங்களை பறிமுதல் செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.













