பாத யாத்திரை பக்தர் கடத்தல்

0
1218

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா உப்பிலிகுண்டு மேல தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 27). மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் போலீசாக உள்ளார். இவரும், எலக்ட்ரீசியன் நாகராஜ் (24) உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 16-ந்தேதி மதுரையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை வந்தனர். விஜயகுமார், நாகராஜ், ரமேஷ், மருது என்ற மாயா உள்ளிட்டவர்கள் முத்தையாபுரம் பொட்டல்காடு விலக்கு அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் நாகராஜை வழி மறித்து வலுக்கட்டாயமாக இழுக்க

சிறிது தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் இருந்த மதுரை உப்பிலிகுண்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் நாகராஜிடம் ஒரு பெண்ணின் பெயரை சொல்லி அவர் எங்கே? என்று கேட்டு நாகராஜை காரில் ஏற்றி கடத்தினர்.இதுகுறித்து விஜயகுமார் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டுக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணையில் நாகராஜ், பாலமுருகன் மனைவியுடன் பழகியதும் ஊர் பெரியவர்கள் நாகராஜனை கண்டித்து அனுப்பியதும் தெரிய வந்தது. இதற்கிடையே கடத்தி செல்லப்பட்ட நாகராஜ் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறி காரில் இருந்து இறங்கி தப்பி சென்று விட்டாராம்.

இதனையடுத்து பால முருகன், பனையூர் பிரகாஷ் (29), அவரின் தம்பி ராமசந்திரன் (27), பாலு மகன் வினோத் (19), ஆண்டி மகன் விஜய் (22), மணிகண்டன் ஆகியோரை எலியார்பத்தி போலீசார் வழிமறித்தனர். இதனை பார்த்தவர்கள் காரில் இருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.

பிரகாஷ் போலீசில் மாட்டி கொண்டார். பின்னர் மதுரை போலீசார் உதவியுடன் ராமசந்திரன், வினோத், விஜய் ஆகியோரை முத்தையாபுரம் போலீஸ் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாலமுருகன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை முத்தையாபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here