ஒரு முறை மட்டுமே பயன்படும் 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
குடிநீர் தவிர்த்து பிற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில்கள், அலங்கார பொருட்கள் மற்றும் சிகரெட் ஃபில்டரில் பயன்படுத்தப்படும் பட்ஸ் தெர்மோகோல் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கடினமான பிளாஸ்டிக் கேரி பேக்ஸ், ஸ்டிராஸ், பிளாஸ்டிக் கரண்டிகள், பவுல்கள், பிளாஸ்டிக் கொடிகளோடு இப்போது பிரச்சினைக்குரியதாக மாறியிருக்கும் பேனர்கள் உள்ளிட்டவை தடை செய்ய தீர்மானிக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளன.