விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், நரிக்குறவர்கள் குடியிருக்கும் காலனி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்களை மீட்டு அரசு பள்ளியி ல் தங்க வைத்தனர்.
. தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நரிக்குறவர் காலனிக்கு வந்து ,பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.













