திசையன்விளையில் போலீஸ்காரர் ரகளை -சலூன் கடைக்கு பூட்டு

0
697

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் பணிபுரியும் நேவிஸ்பிரிட்டோவின் மகன் இன்று மதியம் முடி வெட்டுவதற்காக ஒரு சலூன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு முடியை சரியாக வெட்டவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நேவிஸ் பிரிட்டோ அவரது மனைவியுடன் சென்று மற்றொரு சலூன் கடையில் ரகளை செய்துள்ளார். அக்கடைக்காரர் தான் முடிவெட்டவில்லை என்று கூறியும் கேட்காமல் கடையை பூட்டி யுள்ளார். முன்னதாக தொலைபேசியிலும் சலூன் கடைக்காரரை அவதூறாக பேசியுள்ளார்.

நடு பஜாரில் நடந்த இந்த நாராச செயலை பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தவாறு சென்றனர்.

இரு நாட்களுக்கு முன்பு திசையன்விளையில் வக்கீல் ஒருவர் வெட்டப்பட்ட போது அதை தடுத்து காப்பாற்றியதாக இதே போலீஸ்காரரை பாராட்டி போஸ்டர் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here