சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் பழுதுபட்ட நிலையில் உள்ளது இன்று காலை ஆத்தி காட்டைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஜெயராஜ் என்பவர் வெளியூர் சென்று போலீஸ் தேர்வு எழுதிவிட்டு தன் ஊருக்கு செல்வதற்காக சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்
அப்போது பஸ் நிலையத்தில் மேற்கூரை பூச்சு விழுந்து அவரது காலில் காயம் ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார் இதற்கு முன்பும் ஒரு முறை இவ்வாறு விவரிதம் நடந்துள்ளது
எனவே, மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்