தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பு சில பாடத் தேர்வுகளுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. வரும் 15ஆம் தேதி தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் விநியோகிக்கவும். போக்குவரத்து வாகன வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.
ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கவேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில், நீதிமன்றமும் தேர்வை தள்ளிவைக்குமாறு ஆலோசனை அளித்தது. எதிர்க்கட்சியினரும் போராட்டம் அறிவித்தனர்.
இந்நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு ஒத்தினைப்பு தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதையடுத்து அவர் கூறியதாவது: 10 வகுப்புக்கான பொது தேர்வும், 11ஆம் வகுப்பு தேர்வும் முற்றிலும் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. கால், அரையாண்டு தேர்வுகளின் மதிப்புடன் 20{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.














