நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் வசந்தி கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்ததாக வழக்குு தொடரப்பட்டிருந்தது. அவர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வசந்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இல்ல நிகழ்விற்காக (பூ புனித நீராட்டு விழா) கலந்துகொள்ள வேண்டி ஜாமீன் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவுகாவல் ஆய்வாளர் வசந்திக்கு 3 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, உரிய காவல்துறை பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மேலும், வீட்டில் இருந்து வெளியே செல்லவோ, கைபேசி உபையோகிக்கவோ, மற்ற நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்ள கூடாது. மேலும், மனுதாரர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.











