பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் அரசியல் கருத்துக்களை அள்ளிவீசினார். ‘அரசியல்ல புகுந்து விளையாடுங்க, விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீங்க’ என்றவர், பேனர் வைத்த தனது ரசிகர்களை தாக்கவேண்டாம் என்று போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தார். பின்பு, ‘யாரை கைது செய்யணுமோ, அவங்களை விட்டுட்றாங்க’ என்று நேரடி ‘அட்டாக்’ விட்டார்.