திருக்கோவிலூர் அருகில் உள்ள வடகரைதாழனூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் கிராமப் பிரச்சாரம் நடந்தது. ஊர் அம்மன் கோவில் வாசலிலேயே பக்தர்களும், திகவினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சாளர் அதிரடி அன்பழகனின் உரையை கேட்டனர்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அம்மன் கோயிலிருந்துதான் பிரச்சாரக் கூட்டத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. கோயிலின் ஒரு பகுதியில் அய்யப்ப பக்தர்கள் பஜனைக்காக வைத்திருந்த மைக்செட் 2 மணி நேரம் இலவசமாக வழங்கப்பட்டது.
‘இதையெல்லாம் பார்க்கும்போது இந்துத்வ சக்திகள் இங்கு ஊடுருவ எந்த தலைமுறையிலும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது’ என கூட்டத்தை வேடிக்கை பார்த்த அதிமுககாரர் கூறினார்.













