தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் கண் தான விழிப்புணர்வு குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.









