சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திறந்த வேனில் நின்ற படி காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சர் பழனிசாமி, சென்னை – தலைமை செயலகம் முகப்பு பகுதியில் உள்ள கோட்டை கொத்தளத்தில், மூவர்ண தேசிய கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றினார் .
காலை 9 மணிக்கு சுதந்திர தின விழா துவங்கியது தேசிய கொடியை ஏற்றி வைத்த பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார் சுதந்திர தின விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் முக்கிய இடங்களில், சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.