முன். அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: அண்ணாநகர் தரகருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை

0
271

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு
சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 22ஆம் தேதி அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 25 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் கிட்டத்தட்ட 55 சதவீதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்தனர்.

போக்குவரத்து துறைக்கு கொள்முதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள், சிசிடிவி கேமராக்கள், ஸ்டிக்கர்கள், அறிவிப்பு பலகைகள், பேருந்துகளில் ஒட்டப்படும் எதிரொளிப்பு ஸ்டிகர்ஸ்
ஆகியவற்று மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்துள்ளாரா என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இந்த நிலையில் தற்போது போக்குவரத்து துறைக்கு உபகரணங்களை வழங்கி வந்த தனியார் கம்பெனிகளுக்கு ஏஜென்டாக இருந்து வந்த ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமாக உள்ள அண்ணா நகர் 6வது பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தையில் குறைவான விலைக்கு கிடைக்கக்கூடிய போக்குவரத்து துறைக்கு தேவைப்படும் உபகரணங்களை அதிக விலைக்கு போக்குவரத்துத் துறைக்கு விற்று அதன் மூலம் கிடைக்கக்கூடிய லாபங்களை தரகர்கள் மூலம் இந்த பணமானது அமைச்சருக்கு கொண்டு செல்லப்பட்டதாக என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

டிஎஸ்பி தலைமையில் வந்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவியுடன் ரவிக்குமார் அலுவலகத்தில் தற்போது சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here