சார்ஜா – சென்னை: உள்ளாடையில் 400 கிராம் தங்கம் கடத்திய வாலிபர் கைது

0
943

சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் தங்கம் வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்தனர். சந்தேகத்திற்கிடமான கடலூரை சேர்ந்த 28 வயது வாலிபரை நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர். அவரது உடமைகளை சோதனை செய்ததில் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன.

பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். உள்ளாடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனா். ரூ. 22 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here