பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற நிலையில் இந்தியாவின் ‘ரூபே’ கார்டு திட்டத்தை அங்கும் அவர் தொடங்கி வைத்து அங்கு இந்திய நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இனிப்புக் கடையில் லட்டுகளை வாங்கி விட்டு ‘ரூபே’ கார்டு மூலம் பணம் செலுத்தினார்.
இந்த கார்டு ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் பூடானில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் முதலாவதாக அமீரகத்தில் தான் தற்போது ‘ரூபே’ கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அபுதாபி, துபாய் உள்பட அமீரகம் முழுவதிலும் உள்ள 5 ஆயிரம் ஏ.டி.எம். எந்திரங்களில் இந்த கார்டை பயன் படுத்தி பணம் எடுத்துக் கொள்ள முடியும்..