மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 1,600 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்தியாவில் உள்ள பத்து சிறந்த தலங்களில் இரண்டாவது தலமாக மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட கூட்டம் அலைமோதும். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.













