வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘ பொருளாதாரத்தை மேம்படுத்தவே எனது வெளிநாட்டு பயணம். தொழிலதிபர்களை அழைத்து முதலீட்டை ஈர்க்கவே எனது வெளிநாடு செல்கிறேன்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட மாத்திரத்தில் தொழிற்சாலை வந்துவிடாது. நாம் போய் அழைத்தால்தான் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவார்கள்’ என்றார்.















