ஐஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தனது மரணத்திற்கு காரணம் பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபனாபன் என்பதை வாக்குமூலமாக தனது அலைபேசியில் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
இதை கண்டுபிடிக்கக்கூட ஃபாத்திமா குடும்பத்தினர் சிரமப்பட்டனர். ஃபாத்திமாவின் அப்பா மற்றும் தங்கை ஆயிஷா லத்தீப் ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையம் சென்றனர். அங்கே ஃபாத்திமாவின் செல்போன் இருந்தது. அதை ஆயிஷா எடுத்த போது காவல்துறையினர் அதில் சார்ஜ் இல்லை என்று சொல்லியுள்ளனர்.
உடனடியாக ஆயிஷா தனது சார்ஜரை எடுத்து ஃபாத்திமாவின் அலைபேசியை உயிர்பித்துள்ளார். அப்பொழுது அதில் இரண்டு குறிப்புகள் இருந்துள்ளது. ஒன்று ஃபாத்திமா தனது குடும்பத்தாருக்கு எழுதி குறிப்பு மற்றும் ஒன்று தனது மரணத்திற்கு காரணம் சுதமர்சனன் பத்மநாபன் என்கிற தனது பேராசிரியர் என்கிற குறிப்பு.
இவ்வாறு தான் ஃபாத்திமா மரண மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டது. மரண வாக்குமூலமே கொடுத்துள்ள நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டோரை காவல் நிலையம் அழைத்துக்கூட விசாரிக்க போலீஸ் தயங்குகிறது. ஐஐடி வளாக விருந்தினர் விடுதியில் தான் விசாரணை நடந்தது. எப்படியோ, தமிழகத்தை நம்பி வந்த ஓர் இளம்பெண்ணின் மரண புதிருக்கு விடை காணவேண்டியது தமிழக அரசின் கடமை.














