CBE.04.08.21.N09.P1
நொய்யல் ஆற்றில் கழிவுகளுக்கு தீ:
புகையால் போக்குவரத்து பாதிப்பு
கோவை,
சூலூர் அருகே இருகூர் நொய்யல் ஆற்றில் கழிவுகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் கொளுந்துவிட்டு எரிந்த தீயினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சூலூர் அருகே இருகூர் பகுதியில் நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் கரையில் சமூக விரோதிகள் குப்பைகளையும் கழிவுப் பொருட்களையும் கொட்டி வருகின்றனர். இன்று காலை அங்கு கொட்டிய கழிவுகளில் தீப்பிடித்தது. அப்போது எழுந்த புகையினால் பாலக்காடு சேலம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். தீ பற்றிய பகுதி இருகூர் எண்ணெய் நிறுவனங்களுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பொருட்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இருந்தது. தீ முற்றிலுமாக அனைக்கப்பட்டதால் இங்கு இந்த 3 எண்ணெய் நிறுவனங்களில் சேமிப்பு கிடங்குகளில் இருந்த எண்ணெய் பொருள்கள் இந்த விபத்தில் இருந்து தப்பின. சம்பவ இடத்திற்கு சிங்காநல்லூர் காவல் துறை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் சிவகிரி உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் கழிவு பொருட்களை கொட்டிய லாரி மற்றும் 3 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.














