புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

0
1369

புதுக்கடை பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் அருளப்பன் (வயது 65) தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த அருளப்பன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார்.

அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பறிதாபமாக இறந்தார்.

இது குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here