நேத்து கூட பத்தாயிரம் கொடுத்தேன்: உடன்குடி பத்திரப்பதிவு ஊழல்

0
1869

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் போகும் இடமெல்லாம் கூறி வருகிறார் .ஆனால் ,பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் கொழித்துக் கிடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பத்திர பதிவு அலுவலகத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காசு வாங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.’பிரைவேட் அட்டெண்டன்ஸ்’சுக்காக கட்டிய நிலையில் சார் பதிவாளர் வராததால் கொதிப்படைந்த பத்திர எழுத்தர் ஒருவர், அவரை சரமாரியாக குற்றஞ்சாற்றும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.

அதில் பத்திர எழுத்தர், ‘நேற்று கூட பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தேன்’என்று ஆத்திரத்துடன் பேசுகிறார். அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் சார்பதிவாளர் பதில் கூறுகிறார்.

காணொளி கீழே:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here