நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள பிரபல பீடிக் கம்பெனியின் நூல் மற்றும் லேபிள் கொண்ட பீடிக்கட்டுகள் சேர்ந்தமரம் பகுதியில் விற்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து அக்கம்பெனி யின் பிரதிநிதி ராமச்சந்திரன் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் விசாரித்ததில் வெண்றிலிங்கபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம்(38), கள்ளம்புளியைச் சேர்ந்த வெள்ளத்துரை(34) ஆகிய இருவரும் மேலப்பாளையம் கம்பெனி பெயரில் பீடி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். ரூ.1லட்சம் மதிப்பிலான போலி பீடி பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.