உறவுக்கு மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவர் மாமனார், மாமியார் மீது வழக்கு

0
1225


காளப்பட்டி பாலாஜி நகர் கிரீன் கார்டன் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் கிருபாகரன் (29). தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் ரேணுகாதேவி (25) என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது மாமனார் மாமியார் உடன் ரேணுகாதேவி கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ரேணுகா தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றதால் முதுகு வலியுடன் ரேணுகாதேவி இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கிருபாகரன் தனது மனைவியிடம் கட்டாயப்படுத்தி உறவு வைத்துள்ளார். இதன் காரணமாக கடுமையான முதுகுவலியால் ரேணுகாதேவி அவதிப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் தனது கணவருடன் உறவு வைத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருபாகரன் தனது மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு ரேணுகாதேவி மறுத்துள்ளார். மறுநாள் கிருபாகரன் இந்த விஷயத்தை தனது தந்தை கணேசன், தாயார் இந்திராணி மற்றும் தனது தம்பி சரவணன் ஆகியோரிடம் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து ரேணுகா தேவியின் மாமனார் கணேசன் ,மாமியார் இந்திராணி ஆகியோர் தனது மகன் கிருபாகரன் உடன் சந்தோசமாக வாழ விட்டால் அவன் சந்தோஷத்திற்கு வேறு விபச்சார பெண்ணிடம் செல்ல நேரிடும் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா தவி இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கிருபாகரன், ரேணுகா தேவியை அடித்து உதைத்துள்ளார். மேலும், திருமணத்தின்போது 50 பவுன் தங்க நகை தருவதாக கூறிவிட்டு 25 பவுன் நகை மட்டும் தான் உனது வீட்டில் கொடுத்துள்ளார்கள். எனவே, மேலும் 25 பவுன் நகை வாங்கி வரவேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து ரேணுகாதேவியின் பெற்றோர் அங்கு வந்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் கிருபாகரன் மற்றும் அவரது பெற்றோர் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து ரேணுகா தேவி கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து ரேணுகா தேவியின் கணவர் கிருபாகரன், மாமனார் கணேசன், மாமியார் இந்திராணி, மற்றும் கிருபா கரணின் சகோதரர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here