ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சின்ன ஆணையூரை சேர்ந்தவர் விஜயன் மகன் முனியாண்டி என்ற மூர்த்தி 30. இவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கைதிமுனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரி பரசுராமன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கைது முனியாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.