நெல்லையில் நாளை விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் சங்கத்தமிழன் திரைப்படம் 10 திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்நிலையில், விக்னேஷ் பிக்சர்ஸ் சார்பில் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டது.
2013ஆம் ஆண்டு ‘நளனும் நந்தினியும்’ என்ற திரைப்படத்திற்க்காக லிப்ரா நிறுவனத்தை சேர்ந்த ரவி, நெல்லையை சேர்ந்த விக்னேஷ் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு 15 லட்சம் வழங்கவேண்டியிருந்தது. சங்கத்தமிழன் பட வெளியீட்டுக்கு முன்பு பணத்தை கொடுத்துவிடுவதாக அவர் கூறியிருந்ததாகவும். ஆனால் தரவில்லை என்பதால் இப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்றும் விக்னேஷ் பிக்சர்ஸ் மனுவில் கூறியது.
விசாரித்த நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சங்கத்தமிழன் படத்தை வரும் 21ஆம்தேதி வரை வெளியிட தடை விதித்து தீர்ப்பளித்தது.















