திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் மீது வழக்கு

0
256


கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் திலகவதி (38). இவர் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் திருமணமாகாத இவருக்கும் கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்துவரும் மௌனிஸ்வரன் என்பவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. மௌனிஸ்வரன் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி மௌனிஸ்வரன் அடிக்கடி திலகவதி உடன் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் முனீஸ்வரன் திலகவதியிட மிருந்து 65 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாங்கிய பணத்தை அவன் மௌனிஸ்வரன் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து திலகவதி பலமுறை கேட்டும் மௌனிஸ்வரன்
சரியான பதில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

மேலும் திருமணம் செய்வதாக கூறிய மௌனிஸ்வரன் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து திலகவதி தான் ஏமாற்றப்பட்டதாக கோவை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here