இயக்குனர் கவுதம் மேனன் 2016ஆம் ஆண்டு தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட ஷூட்டிங்கை தொடங்கினார். விரைவில் படம் வெளியாகி விடும் என்று பார்த்தால், அப்படியே அந்த படத்தை பாதியிலேயே விட்டு விட்டு துருவ நட்சத்திரம் படத்தை எடுக்க தொடங்கினார் கவுதம்.
மீண்டும் 2017ல் அப்படத்திலிருந்து மறுவார்த்தை பேசாதே… என்றொரு பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலின் இசையமைப்பாளர் யார் என்று தெரியாமலேயே வெளியிடப்பட்டது மிகப்பெரிய புரோமோஷனாக இருந்தது.
2018ஆம் ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸாகாமல் இருந்த படம், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்பட்டு தற்போது தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகியதுடன் அதில் செப்டம்பர் 6ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.