ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு சுதி ஈமு பார்ம்ஸ், கதி ஈமு பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சுதி ஈமு பார்ம்ஸ் அண்ட் ஹேச்சரிஸ் என்ற பெயர்களில் ஈமு கோழி பண்ணை நிறுவனத்தை பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியன். என்பவர் மகன் .தமிழ்நேசன், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்காவை சேர்ந்த கொங்கு பேரவை அமைப்பின் தலைவர்.யுவராஜ் மற்றும் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த சின்னதம்பி என்பவரின் மகன் .வாசு, ஆகியோர்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு விளம்பரம் செய்தனர். முதலீட்டாளர்களிடம் ஆசைவார்த்தைக்கூறியும், அவ்வாறு திட்டம்-1 பண்ணைத் திட்டத்தில் ரூ.1லட்சத்து 50ஆயிரம் முதலீடு செய்தால் அதற்கு ஒரு செட் அமைத்துக்கொடுத்தும் முதலீட்டாளர்களுக்கு 6 ஈமுக்கோழிகள் கொடுத்தும், அதற்கு தேவையான தீவணங்கள் மற்றும் மருந்துகள் கொடுப்பதாகவும் விளம்பர படுத்தினர். மேலும் மாதாமாதம் பராமரிப்புத் தொகையாக முதலீட்டாளர்களுக்கு ரூ.7,000/-ம் கொடுப்பதாகவும், வருடமுடிவில் ஊக்கத்தொகையாக முதலீட்டாளர்களுக்கு ரூ.20,000/-ம் தருவதாகவும் கூறினர் .

மேலும் திட்டம்-2 பண்ணைத் திட்டத்தில் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் நிறுவனமே 6 ஈமு க்கோழிகளை பராமரித்தும், முதலீட்டாளர்களுக்கு மாதாமாதம் 8ஆயிரம் கொடுப்பதாகவும், வருடமுடிவில் ஊக்கத்தொகையாக முதலீட்டாளர்களுக்கு 20 ஆயிரம் தருவதாகவும் கூறியும், முதலீட்டாளர்களிடம் 2 வருடகாலம் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
ஆனால் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே பணத்தை திருப்பித்தராமலும், 121 முதலீட்டாளர்களிடம் 2 கோ டியே 70 லட்சத்து 15ஆயிரத்து 550 ரூபாயை ஏமாற்றி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து
நிறுவனத்தில் இரண்டு விதமான திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளரான நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தோக்கவாடியைச் சேர்ந்த பொங்கைய கவுண்டர் மகன் பழனிசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சௌந்தரராஜன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மற்ற குற்ற வாளிகள் கைதான நிலையில் இந்த வழக்கில் கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்திலையில், கோகுல் ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்வழக்கில் மொத்தம் 139 சாட்சிகளை விசாரித்து முடித்து இன்று நீதிமன்றத்தில் மூன்று குற்றவாளிகள் ஆஜரானார்கள்.
தொடர்ந்து கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி எதிரிகள் மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூவருக்கும் சேர்த்து .2 கோடியே 47 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்புக் கூறினார்.
முன்னதாக கொங்கு யுவராஜின் ஆதரவாளர்கள் மற்றும் ஈமு கோழி முதலீட்டாளர்கள் ஏராளமானோர் கோர்ட் வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.