ரபேல் மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

0
1575

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்குவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது தொடர்பானது.
விமான விலை நிர்ணயம், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட ஒப்பந்தங்களில் ஊழல் நடந்ததாகவும், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி 6 வழக்குகளும் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களுக்கு நிறைவு பெற்ற பின் கடந்த மே 10ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று அந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here