சென்னை காசிகேடு காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றிய சிதம்பர முருகேசன் தனது பணியால் பொதுமக்களை கவர்ந்துள்ளார். அங்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து இளைஞர்களை காப்பாற்றியுள்ளார். மீன் விற்பனைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளார். பந்தா காட்டாமல் பண்புடன் பழகியுள்ளார்.
இந்நிலையில் அவரை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர். இதனால் வேதனையடைந்த பெண்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சிதம்பர முருகேசனே நேரில் வந்து சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. இறுதியில் தன வேறிடத்துக்கு போகப்போவதில்லை என்று கூறிய பின்பே சமாதானமாகி சாலை மறியலை கைவிட்டுள்ளனர்.