மனைவியுடன் தகராறில் கணவர் தற்கொலை

0
592

தென்தாமரைகுளம் அருகே உள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). விவசாயி. இவருக்கு பாக்கியலட்சுமி (30) என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த ராஜேஷ், விஜயநகரி அருகில் உள்ள தேவகுளக்கரைக்கு சென்றார். அங்கு அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் குலசேகரம் அரமன்னம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 60). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த புஷ்பராஜ் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here