போக்ஸோ சட்டத்தில் இரு வாலிபர்கள் உடனடி கைது

0
871

சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். 


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த பூல்பாண்டி மகன் முத்துராஜ் (22), ஆபிரகாம் மகன் ஜஸ்டின் (21) ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்ற 13 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின் பேரில் அவரது பெற்றோர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர்  ஏசு ராஜசேகரன், விசாரணை நடத்தி முத்துராஜ், ஜஸ்டின் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இருவரையும்  கைது செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here