சென்னையில் விமானத்தில் இறங்கிய பயணியிடம் 675 கிராம் தங்கப் பசை, ஏறிய பார்சலில் 10,100 போதை மாத்திரை

0
548

சாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா விமானத்தில் சென்னை பன்னாட்டு விமானநிலையம் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதணை செய்தனர்.

விமானத்தில் வந்த சென்னையை சோ்ந்த சக்திகுமாா் கிருஷ்ணசாமி(29) என்ற பயணி தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு,கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றாா்.ஆனால் அவா் மிகுந்த பதட்டத்துடன் சென்றதால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை நிறுத்தி விசாரித்தனா் அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசினாா்.

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனா்.அவருடைய உள்ளாடைகளுக்குள்,4 பிளாஸ்டிக் டப்பி மறைத்து வைத்திருந்தாா்.அதை எடுத்து உடைத்து பாா்த்தனா்.அதனுள் தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது.4 பிளாஸ்டிக் டப்பிகளிலும் 675 கிராம் தங்கப்பசை இருந்ததை கைப்பற்றினா் அதன் மதிப்பு ரூ.32.44 லட்சம்.

இதற்கிடையே சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லவிருந்த சரக்கு விமானத்தில் ஏற்ற வந்திருந்த கொரியா் பாா்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்ப 7 கொரியா் பாா்சல்கள் வந்திருந்தது அதனுள் முக்கியமான டாக்குமெண்ட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் அந்த பாா்சல்களை டில்லியை சோ்ந்த ஒருவா் அனுப்பியிருந்தாா்.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பாா்சல்களை திறந்து பாா்த்து சோதனை செய்தனர் 7 பாா்சல்களிலும் 10,100 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.அந்த போதை மாத்திரைகளின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.30 லட்சம்.இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here