திருமங்கலம் அருகே 40 அடி கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

0
527

மதுரை திருமங்கலம் தாலுக்கா கீழ உரப்பனூர் அருகே உள்ள சமுதாயக்கூடம் பின்புறத்தில் அமைந்துள்ள 40 அடி கிணற்றில் விழுந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த காசி மகள் ராஜேஸ்வரி வயது 29. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் சிறப்பு அலுவலர் குமார் தலைமையிலான மீட்புக்குழுவினர் பெண்ணை உயிருடன் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை முயற்சி செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here