வட சென்னையில் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டபோது மதுசூதனன் வயது 14.
அந்த வயதிலேயே எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கி , அவருடனே தொடர்ந்து செயல்பட்டவர் மதுசூதனன். அவர் தற்போது உடல் நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக்காண மருத்துவமனைக்கு வந்த சசிகலாா கூறியதாவது:
எங்களுடைய கட்சியின் அவைத்தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவருக்காக வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளேன் , அவரது உறவினர்களிடமும் பேசியுள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனை நேரில் பார்த்தேன்
எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திமுகவின் சகோதரர் , எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் மதுசூதனன் குணம் பெற்று வருவார்.













