பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் இ-கேஒய்சி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 18வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். முதல் வழிமுறை தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட www.pmkisan.gov.in வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம் என ஆட்சியர் லெட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.







