மீண்டும் மக்களை வங்கி வாசலில் நிறுத்தும் மோடி அரசு

0
461

முகமது பின் துக்ளக் ஆட்சியின் 2.0 வெர்ஷனாக மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. வேலை மெனக்கட்டவன் வீட்டை உடைத்தான், பின்பு வீடு கட்ட ஆரம்பித்தான் என்பது போல் திடீரென நள்ளிரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த பிரதமர் மோடி பொது மக்களை எல்லாம் வங்கி வாசலுக்கு முன்பு நிறுத்தினார்.

இப்போது மீண்டும் அவர்களை வங்கி வாசலுக்கு விரட்டுகிறார். அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அடிக்காமல் இருப்பதற்கு காரணம், போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து விடும் என்பதால் தான். அதற்காகவே ஒரு காலத்தில் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாமல் அடிக்கப்பட்டன.

ஆனால் மோடி ஜியோ, ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாததாக்கிவிட்டு, டூரிங் டாக்கீஸ் சினிமா நோட்டீஸ் போல, மெல்லிய ரோஸ் கலர் 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த, ரொம்ப வசதியாக போச்சு என்று கள்ள நோட்டுக்காரர்கள் கும்மாளம் அடிக்க தொடங்கி விட்டனர். இதை எதிர்பார்க்காத இந்திய அரசு, 2000 ரூபாய் நோட்டை அடிப்பதை இடையில் நிறுத்தி வைத்தது

தற்போது 2000 ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்து, செப்டம்பர் 30க்குள் அதை வங்கிக்கு சென்று மாற்ற சொல்கிறது. இதன் மூலம் மீண்டும் வங்கியில் நீண்ட வரிசைகளை நிறுத்த பார்க்கிறது.

ரூபாய் நோட்டுகள் எவ்வளவு அச்சிடப்பட வேண்டும் என்பதை கணிக்க, நாட்டின் தங்க இருப்பு, பத்திர இருப்பு, அன்னிய செலாவணி இருப்பு போன்றவற்றை ஆராய்வது போல், அதிக மதிப்பு மிக்க ரூபாய் நோட்டுகளை அச்சிடும்போது நாட்டின் பொருளாதாரச் சூழல், பணப்புழக்கம் போன்றவற்றைஆராய்வது அவசியம். இனியாவது இது போன்ற அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here