தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 126 ரன் எடுத்தது. பின் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.
வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து. இதனால் சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி தரப்பில் அதிக பட்சமாக பெரியசாமி 5 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.














