கோவில்பட்டி சப் இன்ஸ்பெக்டர் மீது புகார்

0
554

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் பழனிக் குமார்(31) இவருக்கும் செண்பகலெட்சுமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் செண்பகவல்லி கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில், அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து இரு முறை கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா பழனிக்குமார் குடும்பத்தினை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று அழைக்க பழனிக்குமார் குடும்பத்தினர் இருமுறை போலீஸ் ஸ்டேசனுக்கு சென்ற போது சப் இன்ஸ்பெக்டர், இசக்கிராஜா இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர் இந்நிலையில் நள்ளிரவில் பழனிக்குமார் வீட்டிற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா பழனிக்குமாரை கண் மூடித்தனமாக தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பழனிக்குமார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here